கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற
விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 31வயதான ஒரு பிள்ளையின் தாயாரான எஸ். விஜிதா எள்ளுக்காடு உருத்திரபுரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

