வவுணதீவில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இன்று(25) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

 

குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று காலை 8.00 மணியளவில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு பொது மக்கள் அறியப்படுத்தினர்.

 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்

 

இதனைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *