ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை இன்று(25) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

 

வாழைச்சேனை இந்து கல்லூரியில் நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிராக நாளை(25) பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பழைய மாணவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

இந்த நிலையில் பேத்தாளையில் உள்ள அந்த பகுதி ஊடகவியலாளரான உருத்திரன் வீட்டிற்கு சம்பவ தினமான இன்று பகல் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் முருகானந்தம், பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிக்குமார், பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி வரும் மோகன்ராஜ், பிரதேச சபை காவலாளியாக கடமையாற்றி வரும் மயிலானந்தன் மற்றும் சிறிகரன் ஆகிய குழுவினர் சென்று நாளைய ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கையிட வருமாறு அழைப்பு விடுத்தனர்.

 

அதற்கு ஊடகவியவாளர் அதிபர் நன்றாக பாடசாலையை நடத்துகின்றார் என தெரிவித்து இது தேவையற்றது என்னால் வரமுடியாது என அறிவித்துள்ளதையடுத்து அவரை கவனிக்க வேண்டிய வகையில் கவனிப்போம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

 

இதனையடுத்து அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *