மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள காணி விடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(25) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரவிகரன், ஜெகதீஸ்வரன், முப்படைகளின் உயர்மட்ட பொறுப்பதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், மாவட்ட செயலக அலுவலகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

