அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பாதுகாப்புச் சாவடி அருகே நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய 21 வயது இளைஞரை மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் புனித சின்னத்தின் மீது வன்முறை வெறியோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமீபகாலமாக நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள், வாஷிங்டனில் அதிபர்களுக்கான தற்காப்புப் பாதுகாப்பை பலப்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

