தெற்கு லெபனானில் உள்ள ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர்
அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள பாதுகாப்பான திறந்தவெளிப் பகுதிகளுக்குச் செல்லுமாறு ‘எக்ஸ்’ தளத்தில் அரபு மொழியில் விடுக்கப்பட்ட அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நேற்று(24) ஒரே நாளில் விடுக்கப்பட்ட இரண்டாவது கட்டாய வெளியேற்ற உத்தரவு இதுவாகும். இதற்கு முன்னர் 10 கிராம மக்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பகுதிகளுக்கு இது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளுக்கு முன்னும் பின்னும், லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

