நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை

நாட்டைச் சுற்றி தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இப்பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மதியம் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *