சித்தாண்டியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை  மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக தனியார் பேருந்து வண்டியும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று(26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் போக்குவரத்து பஸ் வண்டியும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்கள் ஏற்றிச் சென்ற லொறியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் பாதசாரிகள் வீதியை கடக்கும் வெள்ளை கோட்டு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

 

இதில் பஸ் வண்டியின் நடத்துனர், பஸ் வண்டியின் பிரயாணிகள் மற்றும் லொறியில் சென்றவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *