குடும்பிமலையில் இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் இரு விவசாயிகளை நேற்று (25) சி.ஐ.டி யினர் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று அதிகாலையில் குடும்பிமலை வயல் பகுதியை சிஐடியினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன் போது அந்த பகுதியில் ஒழித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிள் இரண்டை மீட்டதுடன் குடும்பிமலை வயல் வட்டானை தலைவரான 45 வயதுடையவர் மற்றும் விவசாயி ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *