கல்முனை ஹூதா திடலில் புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று(28) காலை 6.30 மணிக்கு இடம் பெற்றது.

ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஸாபித் (ஸரயி,றியாதி) நடாத்தி வைத்தார்கள்.

இம்முறை வழமையைவிட அதிகமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நபிவழி பெருநாள் திடல் தொழுகையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *