புதையல் தேடும் ஸ்கேன் கருவியுடன் 8 பேர் கைது

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட இருந்ததாக சந்தேகிக்கப்படும் 8 சந்தேக நபர்களை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சந்தேக நபர்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் வருகைதந்த வேனில் புதையல் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம், ஒரு வேன் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைத்துறை முகத்துவாரம் (லங்காப்பட்டுண) சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *