புத்தர் பிறப்பு, புத்த ஞானம் அடைந்த நாள், மற்றும் பரிநிர்வாணம் அடைந்த நாளை நினைவு கூரும் பௌத்தர்களின் “வெசாக் தான நிகழ்வு” இன்று(30) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் அருகில் நடைபெற்றது.
இன ஒற்றுமையினை மேம்படுத்தும் முகமாக இவ் நிகழ்வினை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று கிராம அலுவலர்கள் இணைந்து நடாத்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நிகழ்வு ஆரம்பமானது.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.ஜருள் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஜி.எஸ்.சன்ஜீவ ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.
இதற்கான அனுசரணையை காராளசிங்கம் சகாதேவா வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


