குவைத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்

ஈரான் நடத்திய ட்ரோன் (ஆளில்லா விமான) தாக்குதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

விமான நிலையத்தின் பிற வசதிகளுக்கும் இத்தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்தாக்குதலைத் தொடர்ந்து, குவைத் தனது விமானச் சேவைகள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

 

இன்று(03) காலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் காயமடைந்தவர்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *