பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், இம்முறை பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

 

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் சதவீதத்திற்கு அமைய பேருந்து கட்டணங்களை தீர்மானிக்கும் பிரத்தியேக விலை சூத்திரமொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அந்த விலை சூத்திரத்தின்படி, தற்போதைய சூழ்நிலையில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *