முல்லைத்தீவில் 31 வீட்டுத்திட்ட பயனாளர்களுக்கு ஆரம்பக்கட்ட காசோலைகள் வழங்கல்

முல்லைத்தீவில் 31 நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளர்களுக்கு ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுப்பதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் 2.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமை தாங்கினார்.

இதன்போது, வீட்டுத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 31 பயனாளர்களுக்கு வீடமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *