நாட்டின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை

தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகரித்த மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன் அடிப்படையில் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

 

இதேவேளை நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 40 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *