கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தற்போதைய காலகட்டத்தில் தேசிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இணையவழி மோசடிகள், இணையப் பாதுகாப்பு, சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் இணைய குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது ஆரோக்கியமான இலங்கை அமைப்பின் பிராந்திய திட்ட ஒருங்கிணைப்பாளர் வளவாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

