புங்குடுதீவைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

புங்குடுதீவைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

 

இதையடுத்து, கடல்தொழில் அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதன் பயனாக, குறித்த மீனவர்கள் இன்று பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு குறிகட்டுவான் கரைக்கு அழைத்து வரப்பட்டு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

பின்னர், அவர்கள் தங்களது உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.

 

இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் பங்களித்த கடற்படையினருக்கும், மீனவர் சங்கங்களுக்கும், தேடுதல் பணிகளில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மீனவர்கள் பாதுகாப்பாக குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் பாதுகாப்பான கடல்தொழிலும் அமைய வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *