காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகவே மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பரப்புகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படைச் சமூகத்தினருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

