இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று(09) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், இவ் வருடத்துக்கான இரண்டாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டமாக இது அமைந்துள்ளதாகவும், பிரதேச செயலாளர்கள் உள்ளக கணக்காய்வு முகாமைத்துவ பொறிமுறையினை வினைத்திறனாக செயற்படுத்தினால் கணக்காய்வுத் திணைக்களத்தின் பெருமளவான ஐய வினாக்களை குறைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

 

மேலும், கணக்காய்வுத் திணைக்களம் சரியான முறையில் செயற்பட ஆற்றுப்படுத்தி வினைத்திறனான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதனை குறிப்பிட்ட அரசாங்க அதிபர், அபிவிருத்தித் திட்டங்களுக்கு கணக்காய்வு முகாமைத்துவ கூட்டமானது மிகவும் முக்கியமானதாக அமைவதாகவும் குறிப்பிட்டார்.

 

இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. பிரபாகரன், கணக்காய்வு அத்தியட்சகர் திருமதி விஜயசிறி பிரேமதாஸ, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி. பொன்ராணி பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

 

மேலும், இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருபா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ்.கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க.திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இசுரேந்திரநாதன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், துறைசார்ந்த கிளைத்தலைவர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *