கிளிநொச்சியில் அமெரிக்க அதிகாரி கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தில் அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல்-இராணுவ விவகாரங்கள் பணியகத்தின் ஆயுத அகற்றல் மற்றும் குறைத்தல் அலுவலகத்தின் திட்ட முகாமையாளர் கீத் டி. கிளார்க் இன்று (11) நேரில் பார்வையிட்டார்.

பளை அரசர்கேணி பகுதியில் டாஷ் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்ததுடன், அப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, பளை மத்திய கல்லூரியில் வெடிபொருள் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்ட கீத் டி. கிளார்க், மாணவர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், பாடசாலையின் பயன்பாட்டிற்காக 30 கதிரைகளையும் அன்பளிப்பாக வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *