டித்வா புயல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த மூதூர் பிரதேச வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தங்களது தொழில்களை ஆரம்பிப்பதற்காக 2 கோடியே 17 இலட்சம் ரூபாய் நிதியுதவி நேற்று(13) வழங்கி வைக்கப்பட்டது.
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 381 வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு இந்நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட தொழில்களை மீள ஆரம்பிப்பதற்கான தொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவாக இது அமைந்தது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட னதிருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன காசோலைகளை வழங்கி வைத்தார்
இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். ரோஷனா, தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பாளர் முகமது சப்ரான் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

