மாணவன் என்.எம்.பாதிஹ் தேசிய மட்டத்திற்கு தெரிவு

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்ற சதுரங்கப் போட்டியில் சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையின் மாணவர்களான கே.என். சம்லான் நஜ்தி மற்றும் என்.எம். பாதிஹ் ஆகியோர் 12 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மெரிட் தகுதி பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

 

தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் தெஹியத்த கண்டியில் இடம்பெற்ற மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் பங்குபற்றி, அதில் என்.எம். பாதிஹ் என்ற மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

 

இவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எம்எல்ரியாகப் பணியாற்றும் எஸ்.எம். நௌஸாத்தினதும் ஆங்கிலப் பாட ஆசிரியை திருமதி சித்தி சியானா நௌஸாத்தின் செல்வப் மகன் என்பதோடு, சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தில் முழுநேர அல்குர்ஆனை மனனம் செய்யும் ஹிப்ளு பிரிவு மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேற்படி மாணவன் தேசிய மட்டத்திலும் தமது திறமையை வெளிக்காட்டி சாதனையை நிலைநாட்ட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதோடு, போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவனுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பார்கள் ஆகியோரை பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ.ஜௌபர் உட்பட பிரதி அதிபர்கள், கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கம் ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *