மாணவர்களுக்கான “சிறு குற்றங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமூதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக “சிறு குற்றங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (17) பாடசாலையில் இடம்பெற்றது.

 

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 10,11 மற்றும் தரம் 12 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

இங்கு விசேட வளவாளராக சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இக்றாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறு குற்றங்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

 

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ.கமறுந்நிஸா, ஜே.வஹாப்தீன் உட்பட சமூதாய சீர்திருத்த திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.எப்.நிபாஸா, ஏ.ஜே.எப்.றினாபா ஆகியோருடன் தரம் -11 வலயத் தலைவர் எம்.சி. நஸ்றுடீன் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *