மாகாண சுதேச மருத்துவ களஞ்சியசாலைக்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடல்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் உற்பத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் அலியார் நஃபில் தலைமையில் இடம்பெற்றது.

 

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர கலந்துகொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்திற்கான அடிகல்லினை நாட்டி வைத்தார்.

 

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ் மோகனகுமார், மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,  சுதேச வைத்தியர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *