மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள திக்கோடை தும்பாலை பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை வயல் நிலமொன்றில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று(20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானையின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக, யானை உயிரிழந்த நிலையில் காணப்பட்ட வயல் காணியின் உரிமையாளரை வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

