நிந்தவூரில் கடல் அரிப்பு தீவிரம்; மீனவர்களும் பொதுமக்களும் பாதிப்பு

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதியில் கடல் அரிப்பு மற்றும் கடல் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் மீனவர்களும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

கடற்கரைப் பகுதியில் வலை இழுப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாததால், கரைவலை மீனவர்கள் வீதியோரங்களில் வலை இழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் மீன்பிடித் தொழிலும் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அதேவேளை, வீதியோரங்களில் இடம்பெறும் இந்த நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் போக்குவரத்து இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், கடல் அரிப்பைக் கட்டுப்படுத்த நிரந்தர தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *