ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்க காணி, கட்டடங்கள் மக்களிடம் மீள ஒப்படைப்பு

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள 241 ஆம் இராணுவ படையின் வசம் இருந்த ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குரிய காணியும் கட்டடங்களும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக முழுமையாக விடுவிக்கப்பட்டு
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 241 ஆம் இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் ,தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து குறித்த காணி மற்றும் கட்டங்களை குறித்த குழுவினர் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *