ஜேர்மன் நாட்டிற்கான பிரதி தூதுவர் சாரா ஹசுபாத், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதனை இன்று (24) மாநகரசபையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஜேர்மன் அரசும், அந்நாட்டு மக்களும் வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக மாநகரசபை முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது, மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்குவதற்கு ஜெர்மன் தரப்பு தயாராக இருப்பதாக பிரதி தூதுவர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாநகரசபை பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ் குமார், ஜேர்மன் தூதரக அதிகாரி டாரினி டலுவத்த, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகரசபை ஆணையாளர், பொறியாலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஜேர்மன் நாட்டு முனிச் நகர மாநகரசபைக்கும் மட்டக்களப்பு மாநகரசபைக்கும் இடையில் சிறந்த நட்புறவு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

