அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரிக்கு நவீன மலசலகூடத் தொகுதி கையளிப்பு

ப/அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி மாணவர்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் நன்கொடையாளர் ஒருவரின் நிதி உதவியுடன் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன வசதிகளுடன் கூடிய எட்டு மலசலகூடங்கள் அமைக்கப்பட்டு நேற்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.

 

பாடசாலையின் பழைய மாணவரான அரவிந்தின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நன்கொடையாளரை அறிமுகப்படுத்திய அப்புத்தளை நகரைச் சேர்ந்த சமூக வர்த்தகருமான நலீப் அவர்களின் தலைமையிலும் நேரடி கண்காணிப்பிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

 

குறுகிய காலமான ஒரு மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக இம்மலசலகூடத் தொகுதி கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மாணவர்களின் கல்விச் சூழலையும் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் இந்த உயரிய பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நன்கொடையாளருக்கும், நலீப்க்கும், பழைய மாணவரான அரவிந்த்க்கும் ப/அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *