கிளிநொச்சி மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் நோக்கில், துறைசார்ந்த புதிய தொழில் வாய்ப்புக்கள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான வழிகாட்டல் பயிற்சிநெறி 23 ஆம் திகதி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட இணைப்பாளர் திரு. தே. பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி ந. இன்பராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன், பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புக்கள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

