மட்டக்களப்பில் முதன்முறையாக ‘திருக்குறள் மாநாடு’

தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளை உலகளவில் பரப்பும் நோக்கில் அகண்ட தமிழ் உலகம் – இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் “திருக்குறள் மாநாடு – மட்டக்களப்பு 2026” நாளை(28) ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.

 

இம்மாநாட்டில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய வாழ்வியல் நெறிகள் குறித்து உரையாற்றவுள்ளனர்.

 

நிகழ்வின் காலை அமர்வில் தொடக்கவிழா, பேராசிரியர் பரிமேலழகர் நினைவு அமர்வு, மு. வரதராசனார் நினைவு அமர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. பிற்பகல் அமர்வில் கருத்தரங்குகள், சிறப்பு உரைகள் மற்றும் நிறைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

 

திருக்குறளின் கருத்துகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரப்பும் நோக்கில் நடைபெறும் இம்மாநாட்டில் திருக்குறள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.100,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படவுள்ளதுடன், தெரிவு செய்யப்படும் முதல் 10 பேருக்கு தலா ரூ.5,000 ஊக்கப் பரிசும் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *