கையடக்க தொலைபேசி திருத்தும் பயிற்சி நெறி இலவசமாக ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனின் அனுசரணையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு மூன்று மாதங்கள் கொண்ட இலவச கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சி நெறி நேற்று முன்தினம் (15) களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் வே.வாமதேவன், அவ்வமைப்பின் ஆலோசகர் வ.கமலதாஸ், இணைப்பாளர் பி.ரஞ்ஜித்குமார் மற்றும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

மூன்று மாதங்கள் கொண்ட இப்பயிற்சி நெறியை கைடக்கத் தொலைபேசி திருத்துவதில் நனோ தொழில் நுட்பத்தில் சர்வதேச புலமைவாய்ந்த பயிற்றுவிப்பாளர் இசட்.ஐ.அஸ்மீர் பயிற்சிகளை வழங்குகினார்.

 

தற்போதைய காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பழுது பார்ப்பதற்காக பெண்கள் வழங்கும்போது பல விபரீதங்களைச் சந்திக்க முடிவதை நாம் அவதானிக்கின்றோம். மற்றும் இப்பயிற்சியின் பின்னர் அதிக வருமானங்களை தொழில் வாய்ப்பின்றியிருக்கும் இளைஞர் ஈட்டமுடியும். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு இப்பகுதி இளையுஞர் யுவதிகளுக்கு இப்பயிற்சிநெறி முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதில் கலந்து கொண்ட அதிதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *