ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிவைடி கார் விற்பனை நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட காட்சியறை நேற்று (16) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் ஊரணி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிவைடி காட்சியறையின் தவிசாளர் தவபாலன் ஹரி பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரித் பண்டித ரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டு காட்சியறையை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்ற பின்னர் மட்டக்களப்பு மாவட்ட பிவைடி காட்சியறையின் தவிசாளர் தவபாலன் ஹரி பிரதாப் மற்றும் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரித் பண்டித ரத்ன ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரிகள், விநியோகஸ்தர்கள், வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விசேட விருந்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

