மின்சாரக் கட்டணத்தை அடுத்த காலாண்டில் அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எதிர்பார்த்ததை விட அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது எனக் குறிப்பிட்ட அவர், கட்டண அதிகரிப்புக்கான கோரிக்கையை முன்வைக்க எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

