குஷ் போதைப்பொருள் கடத்தல்: வர்த்தகர் கைது!

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ரூ. 66.8 இலட்சம் பெறுமதியான ‘குஷ்’  போதைப்பொருளைத் தனது காற்சட்டையில் மறைத்துக்கொண்டு நாட்டிற்குள் கடத்த முயன்ற 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – வெலிகம பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், நேற்று (12) மாலையில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவர் விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான ‘பசுமை வழி’  ஊடாகச் சோதனைகளின்றி வெளியேற முயன்றபோதே சுங்க அதிகாரிகளின் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

இவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகரெனவும் 668 கிராம்‘குஷ்’  போதைப்பொருளைத் 3 பொதிகளாகத் தயாரித்து காற்சட்டையில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்டுகிறது

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *