அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில், 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான கட்டிடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகள் கட்டுமானம் நடந்த இடத்தின் மீது விழுந்தன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மழை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது கட்டிட பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

