ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருந்தது.

அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் இன்று மேல் நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *