ரணிலை சந்தித்த இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் சீனாவின் பிரதி தூதுவர் ஸு யான்வேய், ஆலோசகர் மேய் ஜிங் மற்றும் மூன்றாவது செயலாளர் ஜின் என்ஸே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக வெய் ஹுவாசியாங் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *