தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், மூன்று மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான ‘நிலை 1’ முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (16) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, நாளை (17) காலை 10:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காப்பொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்த நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

