பழுகாமத்தில் சிறப்பாக இடம்பெற்ற ‘அத்தம்’ தூய்மைப் பணி

 

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘அத்தம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் இன்று (19.09.2026) வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 43 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, பழுகாமம் முதலாம் பிரிவில் அமைந்துள்ள வாய்க்காலைத் துப்புரவு செய்யும் சிரமதானப் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் வாகன உதவியுடன் இடம்பெற்ற இப்பணியில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் எஸ். கமல்ராஜ் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் Clean Sri Lanka இணைப்பாளருமான செல்வி. மகாலிங்கம் மனோதினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் துப்புரவுப் பணியில் இணைந்து கொண்டனர்.

‘எமது கிராமத்தை நாமே சுத்தம் செய்து, தூய்மையான தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ என்ற நோக்கில் மக்களின் பங்களிப்புடன் ‘அத்தம்’ செயற்றிட்டத்தின் கீழான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *