புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் நீண்ட நாட்களாக சேதமடைந்த வீதிகளை கட்டம் கட்டமாக காப்பற் வீதிகளாக புணரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதன் ஒரு கட்டமாக மகிழடித் தீவிலிருந்து பட்டிப்பளை வரையிலான வீதிகளை காப்பற்றிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
வீதிகளை அகலப்படுத்தி வடிகான்கள் அமைத்து அதன்பின் புதிய வீதிக்கான காப்பாற்றிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அரசு ஊழியர்கள் என பெருமளவிலான பொதுமக்கள் இதனால் நன்மை அடைய உள்ளதுடன் பிரயாண நேரமும் குறைவடைய உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

