கிரான்குளம் சத்திய சாயி வைத்தியசாலைக்கு தேசிய கௌரவம்!

மட்டக்களப்பு கிரான்குளம் ஸ்ரீ சத்திய சாயி வைத்தியசாலையானது, இலங்கை மக்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றிச் சேவைகளை ஆற்றியமைக்காகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டுச் சின்னத்தைப் (Token of Appreciation) பெற்றுப் பெருமை சேர்த்துள்ளது.

கௌரவ அமைச்சரின் சார்பில், சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்ஸ அவர்களால் இப் பாராட்டுச் சின்னம் கடந்த 2026 அக்டோபர் 2 ஆம் திகதியன்று எமது மருத்துவமனைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கிரான்குளம் ஸ்ரீ சத்திய சாயி வைத்தியசாலையானது இலங்கை மக்களுக்குத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனும் கருணையுடனும் இலவச சேவையாற்ற எமக்குக் கிடைக்கும் ஒரு பெரிய ஊக்கமருந்தாகவே இக்கௌரவத்தை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *