நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு திகதி நிர்ணயம்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அடுத்து வரும் முதலாவது பாராளுமன்ற வாரத்திலேயே அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு யோசனை முன்வைப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (06) அறிவித்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *