திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம்-04 பகுதியில், உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் மூன்று வீடுகள் நேற்று (05.10.2026) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான வீட்டு வசதி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 7 பயனாளிகளில் மூன்று பேருக்கான வீடுகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. த. கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந் அம்மணி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

