மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதிபதிகள் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மேல்நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க மற்றும் எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) முற்பகல் இருவரும் புதிய பதவிகளுக்கான பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய இரண்டு வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

