மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அருள்ராஜ் ஏற்பாட்டில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (06) இடம் பெற்றது.
இதன்போது பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அரச காணிகளை அரச திணைக்களங்களிற்கு கையளித்தல் மற்றும் பாராதீனம் செய்தல், தனியாருக்கு நீண்ட கால, குறுங்கால குத்தகைக்கு வழங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
பிரதேச செயலக ரீதியாக முன்வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் சிபாரிசுகளும் வழங்கப்பட்டது.
அதேவேளை பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள்,காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் மாவட்ட மட்ட அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

