அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளிலான 5,000 வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு “தமன்கெம தெனக் லஸ்ஸன ஜீவிதயக்” மானிய வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
உலக வாழ்விட தினமான (05.10.2026) ஆம் திகதி வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 206ஆம் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் சித்தி ஜனுபா மற்றும் பிறைந்துறைச்சேனை தெற்கு 206C கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த நூராலெவ்வை ஜுனைத்தீன் ஆகியோருக்காக நிர்மாணிக்கப்பட்ட மானிய வீடுகள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.எஸ். சஜ்ஜாத், கோறளைப்பற்று மத்திக்கான க்ளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். சமீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான எம்.ஏ.சி. நியாஸ்தீன் ஹாஜியார், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம். நளீர், தொழில்நுட்ப உதவியாளர் எம். மயூரதன், கிராம சேவை உத்தியோகத்தர் எம். ஜௌபர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சீ. சாதிக்கீன், சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம். இர்பான், எப். சமீரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உலக வாழ்விட தினம் – 2026ஐ முன்னிட்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக, வீடற்ற மற்றும் வீட்டு வசதி தேவைப்படும் மக்களுக்கு நிரந்தரமான வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

