இன்று உலக அஞ்சல் தினம் !

உலகளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை (09) உலக அஞ்சல் தினம்  அனுஷ்டிக்கப்படுகின்றது.

“ஒரு அஞ்சல் சேவை, எண்ணற்ற சாத்தியக்கூறுகள்” என்ற கருப்பொருளின் கீழ் உலக அஞ்சல் தினம்  அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனையொட்டி, இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை நவீனமயமாக்கும் வகையில் 2027 ஆம் ஆண்டிற்குள் அஞ்சல் சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை அஞ்சல் சேவையை உருமாற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடிதப் போக்குவரத்து மற்றும் விநியோகச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் வகையில் அடுத்த ஆண்டு முதல் அஞ்சல் துறைப் பயன்பாட்டிற்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார முச்சக்கர வண்டிகள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *