எலினாவின் நினைவாக முன்பள்ளிச் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

 

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சிறுமி எலினாவின் ஆத்மசாந்தி வேண்டி, அவரது நினைவாகக் குடும்ப உறவுகளின் நிதி அனுசரணையில், அக்கரைப்பற்று அம்மன் மகளிர் இல்ல பவுண்டேஷன் ஊடாக அம்மன் முன்பள்ளி மற்றும் தாமரை முன்பள்ளிச் சிறார்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அக்கரைப்பற்று, கோளாவில் அம்மன் முன்பள்ளியில் நேற்று (09) வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, முன்பள்ளிச் சிறார்களுக்குப் புத்தகப் பைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், முன்பள்ளிகளின் பயன்பாட்டுக்கான அலுமாரிகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், சிறார்களுக்குப் பகல் உணவும் வழங்கப்பட்டது.

சிறுமி எலினாவின் நினைவாக அவரது குடும்ப உறவுகளின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட இந்நற்பணி, முன்பள்ளிச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் பங்களிக்கும் மனிதநேய முயற்சியாக அமைந்தது.

இந்நிகழ்வில் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேஷன் பணிப்பாளர் திரு. வே. வாமதேவன், கமு/திகோ/விநாயகர் மகா வித்தியாலய அதிபர் திரு. பி. திலகராஜா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *